வெளிநாட்டு நண்பர் கேட்டார், நமது
நக்சல் பிரச்சனை குறித்து
நிலம் குறித்த பிரச்சனை என்றேன்
அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை
இனம் ரீதியான பிரச்சனை என்றேன்
அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை
சமுதாயம் சார்ந்த பிரச்சனை என்றேன்
அவருக்கு எதுவும் புலப்படவில்லை
நிலவியல் ரீதியான விவகாரம் என்றேன்
எழுந்து செல்வதாக கூறினார்
யோசித்தேன் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை
திடீர்என யோசனை வந்தது
அவதார் திரைபடத்தின் கதை என்றேன்
மக்களுக்கான ஆதரவாளர் கிடைத்தார்
அவமானமாய் இருந்த பொழுது தொல்லைகாட்சி
தொடர்ந்து கத்தியது! எந்திரா
Nice mac
பதிலளிநீக்குVk