தற்போது உள்ள லோக்பால் சட்ட வரைவு அமைப்பு என்ன சொல்கிறது:
ஊழலை கண்காணிக்க லோக்பால் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தபடும். அந்த அமைப்பு ஊழல் பற்றிய புகார் சபாநாயகர் முலம் எழுப்பபடும் பொது அந்த புகாரை விசாரிக்கும். லோக்பால் அமைப்பு அந்த புகாரை தீர விசாரித்து சபாநாயகருக்கு பரிந்துரையை அனுப்பும் , பின்னர் சபாநாயகர் அந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுப்பார். இதில் குறிப்பிட பட வேண்டிய செய்தி லோக்பால் அமைப்பால் சுதந்திரமாக ஒருவர் மேல் வழக்கு பதிவு செய்து விட முடியாது. பதிவு செய்தால் விசாரிக்கும் நிதிமன்றம் போன்ற அமைப்பே அது.
ஒரு பல் பிடுங்கபட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தவே நம் அரசியல்வாதிகள் யோசிக்கும் போது ஒரு நேர்மை ஆன அமைப்பை எப்படி ஏற்படுத்தி விட முடியும். என்ன தான் வரைவு குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றாலும் அதை நிறைவேற்ற வேண்டிய இடம் பார்லிமென்ட் தான். அந்த இடத்தில் நாம் அனைவரும் அனைவரும் தோற்று விடுவோம். ஏனெனில் எவரும் தான் சிக்கி கொள்வது போல சட்டத்தை அமைக்க மாட்டர். மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளின் நியமனம் அரசின் முலமே செய்யபடும். ஊழல் தடுப்பு ஆணையாரின் முலம் இவர்கள் செய்யும் நியமனம் எப்படி என நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
நம் நாட்டில் தற்போது லஞ்சம் மற்றும் ஊழல்க்கு எதிராக சரியான சட்டங்கள் இருக்கின்றன அதை சிறிது கடுமையாக்கி மாற்றம் செய்தாலே போதும். நம் சட்டங்கள் பதிவேற்றம் செய்யபடாமல் உள்ளது, காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் செய்யபடாமல் உள்ளது. நம் தமிழ்நாட்டில் தற்போது தேர்தலின் போது அமல்படுத்தபட்ட சுவரொட்டிகளுக்கு தடை என்பது ல் இயற்றபட்டது. தற்போது அதை பயன்பாட்டிற்கு வந்த பொழுது மக்களக்கு அது புதிதாக தெரிகிறது. எப்படி இது சாத்தியம் ஆனது? நேர்மையான அதிகாரிகள் அதை அமல்படுத்திய போது தான் நமக்கு இவை தெரிய வருகின்றன. லோக் ஆயுக்தா சட்டம் இயற்றபட்டு பல ஆண்டுகள் ஆன போதும் இன்று அது இரண்டு மலிந்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது . இருக்கும் சட்டங்களை விடுத்து புதிதாக இயற்றுவது ஒன்றும் பெரிய பயனை தராது.
அன்னா ஹஜாரே முன்மொழியும் சட்டம் தெரிவிப்பது என்ன: லோக்பால் அமைப்பிற்கு முழு சுதந்திரம் அளிக்கபட வேண்டும், அந்த அமைப்பு தன்னிச்சையாக yaar மீதும் வழக்கு தொடுக்கலாம், அந்த வழக்கை லோக்பால் அமைப்பு விசாரிக்கலாம். ஆனால் இந்த அமைப்பிற்கு தேர்ந்தெடுக்க படும் நேர்மை சந்தேகம் பட வைக்கிறது. ஏனெனில் தற்போது தேர்தலை சிறப்பாக நடத்திய பிரவீன் குமார் இரண்டாம் முறை அனுப்பட்ட பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க பட்டவரே, சரியான அதிகாரி இல்லை எனில் இதுவும் மற்ற அமைப்பை போன்று ஆகி விடும்.
ஆதலால் சட்டத்தை இயற்றும் போது இதை முக்கிய காரணியாக பார்க்கவில்லை எனில் நமக்கு மற்றொரு சட்டத்துக்காக நாம் போராட வேண்டி வரும்.