குஷ்பூ: அறிவியலில் நியூட்டன் விதி, திரைபடத்தில் ரஜினி விதி அது போல தேர்தலில் அழகிரி விதி என ஒன்று உருவாகி விட்டது.
ஆமா என்னமோ தலைவர் ஊர் ஊரா கால் வலிக்க நடந்து மக்கள் எல்லோரையும் பாத்து அவங்க கூட பேசி அவங்க மனச மாத்தி தேர்தல்ல வெற்றி பெற்று தாறு. பணத்த குடுத்து வெற்றி பெற்றத நடு ஊர்ல மைக்ல சொல்ற அவலம் நம்ம ஊர்ல தான் நடக்கும். என்ன ஒரு கொடுமை அப்பிடி நு பாத்திங்கனா " பொன் விளையும் பூமியாம், மல்லிகைக்கு தோரணம் கட்டியவர்களாம், வீரத்தில் புகழ் பெற்றவர்களாம், மீனாட்சிக்கு இடம் அளித்தோராம் நம்ம மதுரைல சொல்லிட்டாங்க லே. இந்த மாதிரி சொன்னதால எங்க ஊர் மனம் போயிருச்சு. எங்க ஊர் மீனாட்சி அம்மன் கோயில் உலக அதிசியம் ஆக முயற்சி எடுத்த பொது எங்க உலக அளவுல வரணும் அப்படின்னு ஆசை பட்டோம் ஆனா உலகம் முழுக்க விக்கி கேபிள் முலமா எங்க ஊரா நாசபடுத்திட்டார் இது தான்ம்மா உங்க அண்ணனோட விதி எங்க தல விதி.
வடிவேலு: எங்க தலைவுரு எல்லாரையும் முதலாளி ஆக்கணும் பாக்குறாரு ஆனா அந்த அம்மா ஆடு மாடு குடுத்து ஆடு மாடு மேய்க்க சொல்லுது பாருங்கம்மா. போன் பண்ணா ஆம்புலன்ஸ் உடனே வருது இந்த வந்த அது போய்ரும்ல. பாத்துகங்க.
நீ காமெடி ஆக்டர் தான் அதுக்குன்னு மத்தவன் நடிச்ச படத்த எல்லாம் பக்க மாட்டியா. இப்ப சந்தானம் அப்படி ன்னு ஒரு பையன் ஒரு படத்துல சொல்லும் " பேசணும், பேசணும் பேசி கிட்டே இருக்கணும், ஒரு மணி நேரம் கூட விடாம பேசணும், நாள் முழுக்க பேசணும் ஆனா காசே இல்லாம பேசணும், அதுக்கு நீ நேரா தான் போய் பாத்து பேசணும் " அப்படின்னு சொல்லும். குடிக்கணும் , குடிக்கணும் வருஷம் முழுக்க குடிக்கணும், ஒவ்வொரு நள்ளும் குடிக்கணும் ஆனா காசு இல்லாம குடிக்கணும், அதுக்கு நீ ????????" சொல்லுபா சொல்ல முடியலேல அப்புறம் காமெடி நடிகன் நீயே சொல்ல முடியலேன்னா மக்கள் எப்படி சொல்லுவாங்க. ஒரு மனுஷன் / மனுஷி மாடு, ஆடு குடுத்து புடுவோம்ன்னு சொல்லுறாரு. உங்க தலைவர் குடுத்த தப்பு இல்ல ஆனா மத்தவன் குடுத்த தப்பு. என்ன கொடுமை சார் இது.....
கலைஞர் கருணாநிதி: இந்த தேர்தல் எமெர்ஜென்சி போல உள்ளது. தேர்தல் ஆணையம் சர்வதிகார போக்குடன் செயல்படுகிறது. என்ன சொன்னார்கள். நான் முதல்வர் ஆனால், வீட்டிற்கு வீடு, அரிசி மூட்டை தூக்கி கொண்டு வந்து, அளந்து போடுவேன். நான் முதல்வர் ஆனால் வீட்டுக்கு வீடு எண்ணெய் கலயத்தை தூக்கி கொண்டு வந்து எண்ணெய் ஊற்றுவேன். நான் முதல்வர் ஆனால், இப்படி ஆனால், ஆனால் என்று சொன்னவர்கள், ஆவேன் ஆகவே என்னை ஆதரியுங்கள் என்று சொன்னார்கள். பொன்னர் - சங்கர் படத்தை தொடர்ந்து தீரன் சின்ன மலை படத்துக்கும் கதை வசனம் எழுதுவேன்.
ஏன் தலைவரே வயசானாலும் வாய் துடுக்கும்(இல்லகிய நயம்), பொய் சொல்லற பாங்கும் மாறவே இல்லையே. தலைவரே நம்ம கிராமத்தில ஒரு பல மொழி சொல்லுவாங்க " வாய் இல்லேனா நாய் கூட உன்ன மதிக்காதுன்னு சொல்லுவாங்க. அது யாருக்கு சரியா வருதோ இல்லையோ உங்களுக்கு சரியா வரும். எமெர்ஜென்சி அது பண்ணினோம் இது பண்ணினோம் அப்படி சொல்றிங்களே அப்ப ஜெயில்ல கஷ்டப்பட்ட எத்தனை பேர் ஸ்டாலின் தவிர இன்னைக்கு நல்ல இருக்காங்க. நேத்து வந்தவனுக்கு பதவி , உங்க மகனையும் உங்க அன்பு தம்பிகளையும் ஜெயில்ல போட்ட குடும்பத்தோட தான கூட்டணி வச்சு இருக்கீங்க. கனிமொழிக்காக ஒட்டு மொத்த கட்சி தொண்டன் ஓட மானத்தையும் அடகு வச்சுடிங்களே. எங்களுக்கு தெரியும் தலைவரே நீங்க எங்க எல்லாருக்கும் துரோகம் பண்ணிட்டு இதயத்தில் இடம் வச்சு இருப்பிங்க. நாங்க கூட உங்கள எப்பயாச்சும் திட்டி இருப்போம் கால வாரி விட்டு இருப்போம். ஆனா உங்களுக்கு ஒரு துரோகமும் செய்ய நெனைக்காத நம்ம ஈழ தம்பிங்க, தங்கச்சிங்க எல்லாம் நம்மள எப்படி சபிச்சு இருப்பாங்க. அதான் தலைவரே உங்க குடும்பம், கட்சி, ஆட்சி இப்படி கேவலமா நிக்கிது. ஆனா இது எல்லாத்துக்கும் அப்புறம் கூட உங்களுக்கு ஒட்டு போடலாம்ன்னு தான் இருந்தேன் ஆனா எப்ப தேர்தல் அப்ப கூட கவலபடாம படத்துக்கு கத எழுதவேன் ன்னு சொன்னிங்களோ அப்பவே இந்த தேர்தல்ல உங்களுக்கு ஒட்டு போடா கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க என்ன பெரிய ஒழுக்கமா சாப்பாடு கட்டி தந்து ஒரு ஒரு வீடா கொடுத்து தொலைச்சுடிங்கனா உங்க குடும்பம் தான் எனிக்கும் முதல் அமைச்சர்கள்...
பி.கு:அழகிரி பத்தியும் ஸ்டாலின் பத்தியும் எழுத மாட்டேன் ஏன்னு பாத்திங்கனா நீங்க இல்லன அவங்க ஒரு ஆளே கிடையாது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக