சனி, 2 ஏப்ரல், 2011

அறுவடை

1. இந்த தேசம் சுய சார்புள்ள மக்கள் இருப்பதாலோ, தன்னிறைவு கொண்ட கிராமங்கள் இருப்பதாலோ ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க முடியாது, இந்த தேசத்தின் மக்களாகிய நாம் இந்த தேசத்தின் வளர்ச்சியிலும் சமுதாய பங்களிப்பு முலமே அடைய முடியும் - அன்னா ஹசாரே.
2. இந்த தேசம் உனக்கு என்ன செய்தது என்பதை விட நீ இந்த தேசத்துக்கு என்ன செய்தாய் என்பது யோசி- ஆபிரகாம் லிங்க்கன்.
3. நீங்கள் என்ன பயிரிடுகிறார்களோ அதையே அறுவடை செய்விர்கள்- அன்னா ஹசாரே.
இந்த முன்று செய்திகளுக்கும் ஒற்றுமை இருக்குமா என மற்ற எந்த ஒருவரை கேட்டாலும் இல்லை என்றே சொல்லுவர். ஆனால் ஒற்றுமை இல்லாத இந்த செய்திகளை ஒன்றிணைத்த பெருமை நமது மக்களுக்கே பொருந்தும். இந்த வாக்கியங்களை வரிசையாக படித்தீர்கள் என்றால் ஒரு புதிய தேசம் செல்ல வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய செய்திகளை நமக்கு தெரிவிக்கும் .
புதிதாக உருவாகும் ஒரு தேசம் அந்த மக்களால் மிகவம் விரும்ப படும். மக்கள் தங்கள் தேசத்தின் மீது மிக அதிகமான ஒரு காதலை, பாசத்தை வைத்து இருப்பர். தொடர்ந்த அந்த உழைப்பானது அந்த தேசத்தை மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்து செல்லும். அந்த தேசத்தில் பணம் என்ற ஒன்று மட்டுமே மிகுதி இல்லாமல் இருக்கும்.
மக்கள் தங்கள் தேசத்தின் வளர்ச்சிக்காக எந்த ஒரு செயலும் செய்ய தயாராக இருப்பர். பணம் இரண்டாம் பச்சமகவே இருக்கும்.
நாம் சரியான பாதையை தேர்வு செய்ததால் சரியான ஒரு பாதையில் நம் நாடு சென்று கொண்டு இருக்கும்.
இதுவே அந்த முன்று வாக்கியங்களும் சொல்லலும் செய்தி.
ஆனால் நம் நாட்டு மக்கள் அனைத்து செயல்களையும் தலைகீழ் ஆகவே செய்வர். அதற்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டு.
1. நாம் தவறான தலைவர்களின் வழி காட்டுதலால் தவறான பிரதிநிதிகளை தேர்வு செய்தோம், அவர்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நன்றாக போய் கொண்டு இருந்த தேசத்தின் பாதையை மாற்றி அவர்க் பாதையில் இழுத்து சென்றனர். மக்கள் ஆகிய நாம் அதில் இருந்து வெளி வர முடியவில்லை. ஏனெனில் நாம் அவர்கள் செயலை பார்க்கவில்லை, அதற்கு பதிலாக அவர்களின் கள்ளமிகு வார்த்தைகளை நம்பினோம். நாம் அன்றோடு செத்து போய் கொண்டு இருக்கிறோம்.
நாம் விதைத்த வாக்கு வீணாய் போனது
2. நாம் தேர்வு செய்த பிரதிநிதிகள் சரியனவர்களாக இல்லாததால் நாம் எதுவும் பெறவும் முடிவதில்லை, நமக்கு இந்த தேசத்தின் ஜனநாயகத்தின் ஒரே பந்தத்தை அறுத்து கொண்டு விட்டோம். நாம் நம் தேசத்திற்கும் எதுவும் சரியாக செய்யாமல் இந்த நாடு நமக்கு என்ன செய்தது என கேட்டு வருகிறோம்.
3. ஆனால் காலங்கள் மாற மக்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து இலவசங்களால் தருபவர்களுக்கு வாக்கினை அளித்தனர். அனைத்து பொருள்களும் அனைவர்க்கும் கிடைத்தது ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பெருகவில்லை. மாறாக அவர்களிடம் இருந்து அந்த பணம் வரியாக பெறபட்டது. முதல் முறையாக உலகத்தில் மக்களின் அடிப்படை தேவைகள் மாற்றம் பெற்றன. விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கழித்து தான் நம் கிராமங்களுக்கு அவசர மருத்துவ வண்டியே செல்கிறது இதை தான் நம் கட்சிகளும் நம் மக்களும் சாதனையாக கருதுகின்றனர். என்ன அசிங்கம் அடா சாமி . நாம் மாறும் வரை இந்த தேசம் மாற போவது இல்லை.
தற்போது முதல் வாக்கியத்தை மீண்டும் படியுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக