சனி, 23 ஏப்ரல், 2011

ஜன் லோக்பால்

இதை பற்றி நாம் இன்று தீவிரமாக பேசி வருகிறோம். இந்த தேசத்தில் ஊழல்க்கு எதிராக இப்படி ஒரு ஆதரவு பிரமிக்க வைக்கிறது ஏனெனில் வாக்கிற்காக பணம் பெரும் அதே நேரத்தில் மக்களின் ஆதரவு அரசியல்வாதிகளை சிந்திக்க வைக்கும். ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி, மக்கள் வழக்கம் போல் எந்த ஒரு விஷயத்தை அலசாமல் எடுத்த அவசர முடிவு. லோக்பால் என்றால் என்ன அது எதை முன் வைத்து செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளாமல் போராடுவது போராடாமல் இருப்பதை விட கொடூரமானது.
தற்போது உள்ள லோக்பால் சட்ட வரைவு அமைப்பு என்ன சொல்கிறது:
ஊழலை கண்காணிக்க லோக்பால் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தபடும். அந்த அமைப்பு ஊழல் பற்றிய புகார் சபாநாயகர் முலம் எழுப்பபடும் பொது அந்த புகாரை விசாரிக்கும். லோக்பால் அமைப்பு அந்த புகாரை தீர விசாரித்து சபாநாயகருக்கு பரிந்துரையை அனுப்பும் , பின்னர் சபாநாயகர் அந்த வழக்கின் மீது நடவடிக்கை எடுப்பார். இதில் குறிப்பிட பட வேண்டிய செய்தி லோக்பால் அமைப்பால் சுதந்திரமாக ஒருவர் மேல் வழக்கு பதிவு செய்து விட முடியாது. பதிவு செய்தால் விசாரிக்கும் நிதிமன்றம் போன்ற அமைப்பே அது.
ஒரு பல் பிடுங்கபட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தவே நம் அரசியல்வாதிகள் யோசிக்கும் போது ஒரு நேர்மை ஆன அமைப்பை எப்படி ஏற்படுத்தி விட முடியும். என்ன தான் வரைவு குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றாலும் அதை நிறைவேற்ற வேண்டிய இடம் பார்லிமென்ட் தான். அந்த இடத்தில் நாம் அனைவரும் அனைவரும் தோற்று விடுவோம். ஏனெனில் எவரும் தான் சிக்கி கொள்வது போல சட்டத்தை அமைக்க மாட்டர். மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளின் நியமனம் அரசின் முலமே செய்யபடும். ஊழல் தடுப்பு ஆணையாரின் முலம் இவர்கள் செய்யும் நியமனம் எப்படி என நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
நம் நாட்டில் தற்போது லஞ்சம் மற்றும் ஊழல்க்கு எதிராக சரியான சட்டங்கள் இருக்கின்றன அதை சிறிது கடுமையாக்கி மாற்றம் செய்தாலே போதும். நம் சட்டங்கள் பதிவேற்றம் செய்யபடாமல் உள்ளது, காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் செய்யபடாமல் உள்ளது. நம் தமிழ்நாட்டில் தற்போது தேர்தலின் போது அமல்படுத்தபட்ட சுவரொட்டிகளுக்கு தடை என்பது ல் இயற்றபட்டது. தற்போது அதை பயன்பாட்டிற்கு வந்த பொழுது மக்களக்கு அது புதிதாக தெரிகிறது. எப்படி இது சாத்தியம் ஆனது? நேர்மையான அதிகாரிகள் அதை அமல்படுத்திய போது தான் நமக்கு இவை தெரிய வருகின்றன. லோக் ஆயுக்தா சட்டம் இயற்றபட்டு பல ஆண்டுகள் ஆன போதும் இன்று அது இரண்டு மலிந்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது . இருக்கும் சட்டங்களை விடுத்து புதிதாக இயற்றுவது ஒன்றும் பெரிய பயனை தராது.
அன்னா ஹஜாரே முன்மொழியும் சட்டம் தெரிவிப்பது என்ன: லோக்பால் அமைப்பிற்கு முழு சுதந்திரம் அளிக்கபட வேண்டும், அந்த அமைப்பு தன்னிச்சையாக yaar மீதும் வழக்கு தொடுக்கலாம், அந்த வழக்கை லோக்பால் அமைப்பு விசாரிக்கலாம். ஆனால் இந்த அமைப்பிற்கு தேர்ந்தெடுக்க படும் நேர்மை சந்தேகம் பட வைக்கிறது. ஏனெனில் தற்போது தேர்தலை சிறப்பாக நடத்திய பிரவீன் குமார் இரண்டாம் முறை அனுப்பட்ட பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க பட்டவரே, சரியான அதிகாரி இல்லை எனில் இதுவும் மற்ற அமைப்பை போன்று ஆகி விடும்.
ஆதலால் சட்டத்தை இயற்றும் போது இதை முக்கிய காரணியாக பார்க்கவில்லை எனில் நமக்கு மற்றொரு சட்டத்துக்காக நாம் போராட வேண்டி வரும்.

சனி, 2 ஏப்ரல், 2011

அறுவடை

1. இந்த தேசம் சுய சார்புள்ள மக்கள் இருப்பதாலோ, தன்னிறைவு கொண்ட கிராமங்கள் இருப்பதாலோ ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க முடியாது, இந்த தேசத்தின் மக்களாகிய நாம் இந்த தேசத்தின் வளர்ச்சியிலும் சமுதாய பங்களிப்பு முலமே அடைய முடியும் - அன்னா ஹசாரே.
2. இந்த தேசம் உனக்கு என்ன செய்தது என்பதை விட நீ இந்த தேசத்துக்கு என்ன செய்தாய் என்பது யோசி- ஆபிரகாம் லிங்க்கன்.
3. நீங்கள் என்ன பயிரிடுகிறார்களோ அதையே அறுவடை செய்விர்கள்- அன்னா ஹசாரே.
இந்த முன்று செய்திகளுக்கும் ஒற்றுமை இருக்குமா என மற்ற எந்த ஒருவரை கேட்டாலும் இல்லை என்றே சொல்லுவர். ஆனால் ஒற்றுமை இல்லாத இந்த செய்திகளை ஒன்றிணைத்த பெருமை நமது மக்களுக்கே பொருந்தும். இந்த வாக்கியங்களை வரிசையாக படித்தீர்கள் என்றால் ஒரு புதிய தேசம் செல்ல வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய செய்திகளை நமக்கு தெரிவிக்கும் .
புதிதாக உருவாகும் ஒரு தேசம் அந்த மக்களால் மிகவம் விரும்ப படும். மக்கள் தங்கள் தேசத்தின் மீது மிக அதிகமான ஒரு காதலை, பாசத்தை வைத்து இருப்பர். தொடர்ந்த அந்த உழைப்பானது அந்த தேசத்தை மிக உயர்ந்த இடத்துக்கு எடுத்து செல்லும். அந்த தேசத்தில் பணம் என்ற ஒன்று மட்டுமே மிகுதி இல்லாமல் இருக்கும்.
மக்கள் தங்கள் தேசத்தின் வளர்ச்சிக்காக எந்த ஒரு செயலும் செய்ய தயாராக இருப்பர். பணம் இரண்டாம் பச்சமகவே இருக்கும்.
நாம் சரியான பாதையை தேர்வு செய்ததால் சரியான ஒரு பாதையில் நம் நாடு சென்று கொண்டு இருக்கும்.
இதுவே அந்த முன்று வாக்கியங்களும் சொல்லலும் செய்தி.
ஆனால் நம் நாட்டு மக்கள் அனைத்து செயல்களையும் தலைகீழ் ஆகவே செய்வர். அதற்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டு.
1. நாம் தவறான தலைவர்களின் வழி காட்டுதலால் தவறான பிரதிநிதிகளை தேர்வு செய்தோம், அவர்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி நன்றாக போய் கொண்டு இருந்த தேசத்தின் பாதையை மாற்றி அவர்க் பாதையில் இழுத்து சென்றனர். மக்கள் ஆகிய நாம் அதில் இருந்து வெளி வர முடியவில்லை. ஏனெனில் நாம் அவர்கள் செயலை பார்க்கவில்லை, அதற்கு பதிலாக அவர்களின் கள்ளமிகு வார்த்தைகளை நம்பினோம். நாம் அன்றோடு செத்து போய் கொண்டு இருக்கிறோம்.
நாம் விதைத்த வாக்கு வீணாய் போனது
2. நாம் தேர்வு செய்த பிரதிநிதிகள் சரியனவர்களாக இல்லாததால் நாம் எதுவும் பெறவும் முடிவதில்லை, நமக்கு இந்த தேசத்தின் ஜனநாயகத்தின் ஒரே பந்தத்தை அறுத்து கொண்டு விட்டோம். நாம் நம் தேசத்திற்கும் எதுவும் சரியாக செய்யாமல் இந்த நாடு நமக்கு என்ன செய்தது என கேட்டு வருகிறோம்.
3. ஆனால் காலங்கள் மாற மக்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து இலவசங்களால் தருபவர்களுக்கு வாக்கினை அளித்தனர். அனைத்து பொருள்களும் அனைவர்க்கும் கிடைத்தது ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பெருகவில்லை. மாறாக அவர்களிடம் இருந்து அந்த பணம் வரியாக பெறபட்டது. முதல் முறையாக உலகத்தில் மக்களின் அடிப்படை தேவைகள் மாற்றம் பெற்றன. விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கழித்து தான் நம் கிராமங்களுக்கு அவசர மருத்துவ வண்டியே செல்கிறது இதை தான் நம் கட்சிகளும் நம் மக்களும் சாதனையாக கருதுகின்றனர். என்ன அசிங்கம் அடா சாமி . நாம் மாறும் வரை இந்த தேசம் மாற போவது இல்லை.
தற்போது முதல் வாக்கியத்தை மீண்டும் படியுங்கள்...

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தேர்தல் பிரச்சாரத்தில் சில துளிகள்:

குஷ்பூ: அறிவியலில் நியூட்டன் விதி, திரைபடத்தில் ரஜினி விதி அது போல தேர்தலில் அழகிரி விதி என ஒன்று உருவாகி விட்டது.
ஆமா என்னமோ தலைவர் ஊர் ஊரா கால் வலிக்க நடந்து மக்கள் எல்லோரையும் பாத்து அவங்க கூட பேசி அவங்க மனச மாத்தி தேர்தல்ல வெற்றி பெற்று தாறு. பணத்த குடுத்து வெற்றி பெற்றத நடு ஊர்ல மைக்ல சொல்ற அவலம் நம்ம ஊர்ல தான் நடக்கும். என்ன ஒரு கொடுமை அப்பிடி நு பாத்திங்கனா " பொன் விளையும் பூமியாம், மல்லிகைக்கு தோரணம் கட்டியவர்களாம், வீரத்தில் புகழ் பெற்றவர்களாம், மீனாட்சிக்கு இடம் அளித்தோராம் நம்ம மதுரைல சொல்லிட்டாங்க லே. இந்த மாதிரி சொன்னதால எங்க ஊர் மனம் போயிருச்சு. எங்க ஊர் மீனாட்சி அம்மன் கோயில் உலக அதிசியம் ஆக முயற்சி எடுத்த பொது எங்க உலக அளவுல வரணும் அப்படின்னு ஆசை பட்டோம் ஆனா உலகம் முழுக்க விக்கி கேபிள் முலமா எங்க ஊரா நாசபடுத்திட்டார் இது தான்ம்மா உங்க அண்ணனோட விதி எங்க தல விதி.
வடிவேலு: எங்க தலைவுரு எல்லாரையும் முதலாளி ஆக்கணும் பாக்குறாரு ஆனா அந்த அம்மா ஆடு மாடு குடுத்து ஆடு மாடு மேய்க்க சொல்லுது பாருங்கம்மா. போன் பண்ணா ஆம்புலன்ஸ் உடனே வருது இந்த வந்த அது போய்ரும்ல. பாத்துகங்க.
நீ காமெடி ஆக்டர் தான் அதுக்குன்னு மத்தவன் நடிச்ச படத்த எல்லாம் பக்க மாட்டியா. இப்ப சந்தானம் அப்படி ன்னு ஒரு பையன் ஒரு படத்துல சொல்லும் " பேசணும், பேசணும் பேசி கிட்டே இருக்கணும், ஒரு மணி நேரம் கூட விடாம பேசணும், நாள் முழுக்க பேசணும் ஆனா காசே இல்லாம பேசணும், அதுக்கு நீ நேரா தான் போய் பாத்து பேசணும் " அப்படின்னு சொல்லும். குடிக்கணும் , குடிக்கணும் வருஷம் முழுக்க குடிக்கணும், ஒவ்வொரு நள்ளும் குடிக்கணும் ஆனா காசு இல்லாம குடிக்கணும், அதுக்கு நீ ????????" சொல்லுபா சொல்ல முடியலேல அப்புறம் காமெடி நடிகன் நீயே சொல்ல முடியலேன்னா மக்கள் எப்படி சொல்லுவாங்க. ஒரு மனுஷன் / மனுஷி மாடு, ஆடு குடுத்து புடுவோம்ன்னு சொல்லுறாரு. உங்க தலைவர் குடுத்த தப்பு இல்ல ஆனா மத்தவன் குடுத்த தப்பு. என்ன கொடுமை சார் இது.....
கலைஞர் கருணாநிதி: இந்த தேர்தல் எமெர்ஜென்சி போல உள்ளது. தேர்தல் ஆணையம் சர்வதிகார போக்குடன் செயல்படுகிறது. என்ன சொன்னார்கள். நான் முதல்வர் ஆனால், வீட்டிற்கு வீடு, அரிசி மூட்டை தூக்கி கொண்டு வந்து, அளந்து போடுவேன். நான் முதல்வர் ஆனால் வீட்டுக்கு வீடு எண்ணெய் கலயத்தை தூக்கி கொண்டு வந்து எண்ணெய் ஊற்றுவேன். நான் முதல்வர் ஆனால், இப்படி ஆனால், ஆனால் என்று சொன்னவர்கள், ஆவேன் ஆகவே என்னை ஆதரியுங்கள் என்று சொன்னார்கள். பொன்னர் - சங்கர் படத்தை தொடர்ந்து தீரன் சின்ன மலை படத்துக்கும் கதை வசனம் எழுதுவேன்.
ஏன் தலைவரே வயசானாலும் வாய் துடுக்கும்(இல்லகிய நயம்), பொய் சொல்லற பாங்கும் மாறவே இல்லையே. தலைவரே நம்ம கிராமத்தில ஒரு பல மொழி சொல்லுவாங்க " வாய் இல்லேனா நாய் கூட உன்ன மதிக்காதுன்னு சொல்லுவாங்க. அது யாருக்கு சரியா வருதோ இல்லையோ உங்களுக்கு சரியா வரும். எமெர்ஜென்சி அது பண்ணினோம் இது பண்ணினோம் அப்படி சொல்றிங்களே அப்ப ஜெயில்ல கஷ்டப்பட்ட எத்தனை பேர் ஸ்டாலின் தவிர இன்னைக்கு நல்ல இருக்காங்க. நேத்து வந்தவனுக்கு பதவி , உங்க மகனையும் உங்க அன்பு தம்பிகளையும் ஜெயில்ல போட்ட குடும்பத்தோட தான கூட்டணி வச்சு இருக்கீங்க. கனிமொழிக்காக ஒட்டு மொத்த கட்சி தொண்டன் ஓட மானத்தையும் அடகு வச்சுடிங்களே. எங்களுக்கு தெரியும் தலைவரே நீங்க எங்க எல்லாருக்கும் துரோகம் பண்ணிட்டு இதயத்தில் இடம் வச்சு இருப்பிங்க. நாங்க கூட உங்கள எப்பயாச்சும் திட்டி இருப்போம் கால வாரி விட்டு இருப்போம். ஆனா உங்களுக்கு ஒரு துரோகமும் செய்ய நெனைக்காத நம்ம ஈழ தம்பிங்க, தங்கச்சிங்க எல்லாம் நம்மள எப்படி சபிச்சு இருப்பாங்க. அதான் தலைவரே உங்க குடும்பம், கட்சி, ஆட்சி இப்படி கேவலமா நிக்கிது. ஆனா இது எல்லாத்துக்கும் அப்புறம் கூட உங்களுக்கு ஒட்டு போடலாம்ன்னு தான் இருந்தேன் ஆனா எப்ப தேர்தல் அப்ப கூட கவலபடாம படத்துக்கு கத எழுதவேன் ன்னு சொன்னிங்களோ அப்பவே இந்த தேர்தல்ல உங்களுக்கு ஒட்டு போடா கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க என்ன பெரிய ஒழுக்கமா சாப்பாடு கட்டி தந்து ஒரு ஒரு வீடா கொடுத்து தொலைச்சுடிங்கனா உங்க குடும்பம் தான் எனிக்கும் முதல் அமைச்சர்கள்...
பி.கு:அழகிரி பத்தியும் ஸ்டாலின் பத்தியும் எழுத மாட்டேன் ஏன்னு பாத்திங்கனா நீங்க இல்லன அவங்க ஒரு ஆளே கிடையாது.....

வியாழன், 24 மார்ச், 2011

மக்களின் தேர்தல்

காட்சிகள் மாறுகின்றன! மக்கள் மாறுகிறார்கள்! சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்ற பார்வை விலகுகின்றன. மக்களின் பார்வை சமுதாயம் என்ற கோட்டில் இருந்து தான் என்ற பாதைக்கு சென்று விட்டது. இந்த கட்டுரையை எழுதும் நான் கூட தேர்தல் கமிஷன் போல ஆகி விட்டேன். அப்பொழுது நம் நாடு இப்படி இருந்து என பலது சொல்ல கேட்டு இருக்கிறோம். இன்று(23.03) பகத் சிங் அவர்களின் நினைவு நாள். அவர் நம் நாட்டிற்காக செய்த தியாகம் எத்தனை நண்பர்களுக்கு ஞாபகம் இருக்கிறது, தன் நாட்டிற்காக அனைத்தையும் துறந்து உயிரை விட்டவரை நம்மில் எத்துனை பேரை நமக்கு தெரிகிறது. தேச சேவையில் அத்துணை பெரும் மக்கள் திரண்ட பொழுதும் சிலர் ஆங்கிலேயர்களிடம் பயன் பெற்றனர். அதன் அளவு இன்று பெருகி விட்டது. அது மட்டுமே வித்தியாசம், பதவி உட்பட அனைத்தும் இன்று சந்தைக்கு வந்து விட்டது.
சிறுது நாட்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன், அதில் " இந்த நாட்டுக்கு தேவை படுவது ஒரு தலைவர் தான், அரசியல்வாதி அல்ல. தலைவர் என்று கூகுள் இணைய பக்கத்தில் தட்டினால் ரஜினி பெயர் தான் முதலில் வருகிறது. தமிழ் நாட்டின் நிலைமை தற்போது அனைவர்க்கும் புரிந்து இருக்கும். பகவத் கீதை சொல்கிறது " ஒரு குடும்பம் நன்றாக இருக்க அக்குடும்பத்தில் ஒருவன் அழிவதில் தவறு இல்லை, ஒரு கிராமம் நன்றாக இருக்க ஒரு குடும்பம் அழிவதில் தவறு இல்லை, ஒரு நகரம் நன்றாக இருக்க ஒரு கிராமம் அழிவதில் தவறு இல்லை". நான் இது அனைத்தும் இருக்க வேண்டும் அரசியல் என்ற கேடு கெட்ட தொழில் அழிய வேண்டும் என்றே வேண்டுகிறேன். நம் மக்களில் எத்தனை பேர் சரியான ஒரு நபரை தேர்ந்து எடுத்து விட்டேன் என சொல்கின்றனர்?. நல்ல தலைவர்களும் மக்களால் உதாசீன படுத்த படுகிறார்கள். சிறிது காலமாக ஒரு புதிய கலாச்சாரம் பரவி வருகிறது, எவர் அதிக இலவசம் தருகிறார்களோ அவரே இந்த நாட்டின் முதல்வர். நம் தாத்தா காலத்தில் அன்பளிப்பு பெறுவதே லஞ்சமாக கருத பட்டது, இன்று லஞ்சம் வாங்குவது அன்பளிப்பு பெறுவது போல் ஆகி விட்டது. ஊழல் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நம் நாட்டின் பணம் பெருகி வருகிறது, நம்முடைய கருவுலத்தில் இல்லை, சுவிஸ் நாட்டில், நமது பணத்தின் அளவு அதிகரித்து வருகிறது. நம் நட்டு மக்கள் புழுத்து போன அரிசி கூட இல்லாமல் மரணம் அடைகின்றனர். ஆனால் நம் அரசியல்வாதிகள் நல்ல உணவை பேரவைகளில் சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி போகின்றனர். மக்கள் ஆகிய நாமமும் அப்படி ஆகி கொண்டு இருக்கிறோம். ஒரு தொகுதியில் 500 ருபாய் வங்கி கொண்டு நல்ல மனிதர் ஒருவரை தோற்கடித்தனர்.
கொடுத்த லஞ்ச பணம்= 500 ருபாய்
மொத்த நாட்கள் = 1826 (leap year addition 1 day)
ஒரு நாளைக்கு = 500/1826 = 0.28 பைசா
ஒரு நாளைக்கு நம்மால் 50 பைசா கூட சம்பாதிக்க முடிய வில்லை எனில் நாம் இந்த உலகில் வாழ்வது எதற்கு?
வேளைக்கு உணவு மட்டும் சாப்பிடாமல் நாட்டை பற்றிய செய்தியையும் தெரிந்து கொள்வோம்.

மேற் கூறிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அவன் செய்கிறான் நானும் செய்கிறேன். ஒருவன் மாறுவதால் இந்த உலகம் மாற போவதில்லை. ஆம் இந்த உலகம் தனி பட்ட ஒருவனால் மாற்ற முடியாது. குப்பை ஓரமாக இருப்பதை சகித்து கொள்ள முடியாத எத்தனை பேர் குப்பை பொருட்களை அதில் கொட்டுகிறோம்.நாம் மாறுவோம். சமுதாயம் என்பது இங்கு இருப்பவர்கள் கூறுவது போல ஜாதி அல்ல. ஒட்டு மொத்த உயிர் இனம் இந்த பூமியில் வாழ்வது. ஏன் எனில் ஒரு உயிர் இனம் அல்லது அதன் பிரிவை அழித்தால் மற்ற இனங்கள் பாதிக்க படும். அது போலவே அரங்கேறுகின்றன. ஒரு குடும்பம் மட்டும் அனைத்து பதவி மற்றும் செல்வங்களையும் அள்ளுகிறது. ஆனால் இதற்க காரணம் அரசியல் வாதி அல்ல மக்கள் ஆகிய நாம் தான். சரியான நேரத்தில் நமக்கு தரப்பட்ட வாய்ப் பை நாம் அடகு வைத்து கொண்டோம். அதுவே இன்று பூதகரமாகி விட்டது. தக்க பாடம் சொல்லி தராத ஆசிரியர்கு என்றுமே மதிப்பு இல்லை. அது போலவே நம் மக்களும் ஆகி விட்டனர்.
லஞ்சம் வாங்குவது நற்செயல், ஊழல் செய்வது ஒரு சிறந்த தர்மம், மக்களை ஏமாற்றுவது ஒரு மனித தன்மை உள்ள செயல். இதுவே இன்று புது மொழி. அரசாங்க ழியர்கள் தான் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று இன்று மக்களும் போட்டி போட்டு கொண்டு வாங்க ஆரம்பித்து விட்டனர். ஆதலால் நாம் அனைவருமே இன்று ஊழல் பெருச்சாளிகள் தான், அடிக்கும் பணத்தின் அளவில் மட்டுமே மாறுபாடு. நாட்டுக்காக வாழ்ந்த மக்களை விடுத்து நிழல் முகங்களை பார்க்க நேர்ந்ததலே நாமும் மாறி போய் விட்டோம். ஒரு நாள் நாம் அனைவரும் மாற வேண்டும் அது ஏப்ரல் 13 ஆக இருக்கட்டும். ஒரு நாள் நலவனாக வாழ்வதற்கு இன்றில் இருந்து விரதம் இருப்போம். ஊர் குடி தான் தேர் இழுக்க முடியம் என்ன நண்பர்கள் ஆகிய உங்களை அழைக்கிறேன்.
உங்கள் அன்பு நண்பன், பாரதி

புதன், 23 மார்ச், 2011

கதா நாயகன்

இந்த நபர் திரு. பிரவீன் குமார் , தலைமை தேர்தல் அதிகாரி. இந்த தேர்தலை மிக சரியான பாதையில் செலுத்தி கொண்டு இருக்கிறார். சினிமா நாயகர்கள் அரசியல்வாதிகளிடம் சரண் அடைந்த பொது அவர்கள் அனைவரும் இவர்டிம் பயந்து பொய் உள்ளனர்...

வியாழன், 17 மார்ச், 2011

தேர்தல்


வருது வருது புலி வருது, என் வாழ்கை மாற போகுது,

என் கஷ்டம் தீர போகுது, என் கடன் தீர போகுது, என்

பிள்ளைக்கு நல்ல வாழ்வு வர போகுது என நினைக்கும்

அத்தனை வாக்காளர்களுக்கும் திருநெல்வேலி அல்வாவும்,

திருப்பதி நாமமும் இலவசமாக தேர்தலுக்கு பின் தர படும்

- அனைத்து கட்சி தலைவர்கள் அறிக்கை

பணம் தங்களுக்கு சரியாக வந்து சேரவில்லை அதற்கு தேர்தல் கமிஷன் தான் காரணம் என மக்கள் பரபரப்பு புகார்.

பி.கு. இது கலைஞர் சொல்லி வெளியட்ட செய்தி அல்ல...

வாக்கை தேர்வு செய்வது எப்படி


தேர்தலில் வாக்குகளை யாருக்கு பதிவு செய்ய வேண்டும். ஓர் உதாரணம்: இரண்டாம் உலக போரின் போது பிரிட்டனை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர் சர்ச்சில் ஆனால் போருக்கு பின் வந்த தேர்தலில் அட்லி தான் வெற்றி பெற்றார். நமக்கு யார் தேவை என்று இது போன்று ஆராய்ந்து வாகளித்தால் நம் நாடு கண்டிப்பாக சரியான பாதையில் செல்லும்.