காந்தி உள்ஆட்சியை பரவலாக கேட்டார், இன்று
உள்ளே மிகவும் படர்ந்த ஆட்சியாகி விட்டது
காங்கிரஸ் கட்சியை சுதந்திரத்துடன் கலைக்க சொன்னார் , இன்று
அது முழுதும் கலைந்து கிடக்கிறது
அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெறவேண்டும் என்றார்
அனைத்தும் தண்ணீர் இரைவு பெற்றுவிட்டது
கிராமங்கள் சேர்ந்து நகராக விருப்பட்டார்
நகரங்கள் இன்று கிராமத்தை ஆக்ரமிப்பு செய்கின்றன
அனைத்து அலுவலர்களும் எளிமையாக இருக்க வேண்டினார்
சுவிஸ் வங்கியில் இந்தியாவின் பணம் முதலிடம்
எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையே வலிமை என்றார்
அவரின் படம் போட்ட பணம் உலகம் முழுவதும்
விழித்து இருக்கிறது நமது தூக்கத்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக